Lingam

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday 26 November 2014

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2182 பஸ்கள் – 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் அ.ஞானசேகரன், அறநிலையத்துறை ஆணையர் தனபால், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலன், நகராட்சி தலைவர் என்.பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவுக்காக ஒவ்வொரு துறை சார்பிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், செய்ய இருக்கும் பணிகள் குறித்தும் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் இந்த ஆண்டு 2,182 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தனர். கூட்டத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படும் வருகிற 5–ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரெயிலும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் வருவதாக காவல் துறை சார்பில் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:–
தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் காலில் ஷூ அணிந்துகொண்டு தேரின் அருகில் வருவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. அதை தவிர்க்க போலீசார் ‘ஷூ’ அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மின்சாரம் தடையில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தேரடி வீதியில் கடலைக்கடை மூலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அமைச்சர் பேசினார்

Thursday 9 October 2014

தீபத்திருநாள்

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர்.

அண்ணாமலையார் கோயில்

அண்ணாமலையார் கோயில் (திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்சம்பந்தர்அப்பர்மாணிக்கவாசகர்ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்

பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும்

இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும். முக்தி தரும் தலங்கள் நான்கென சிவபுராணம்குறிப்பிடுகிறது. அவற்றுள் திருவண்ணாமலையும் ஒன்று.

சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற தலம்

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.

நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.